May 16, 2010

அந்த 10 நாட்கள் (may15-24)

அன்பு தமிழ் காவை உறவுகளுக்கு !
சிறு வயது முதலே மே மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது
நமது ஊர் உபகார மாதா கோவில் திருநாள்!
மே 15 இல் தொடங்கி மே 24 இல் முடியும் அந்த 10 நாட்கள் சொர்க்கத்திற்கு அளவே இருக்காது!
இந்த நாட்களில் தான் வெளிநாடுகளில் இருந்தும், சென்னை, மும்பை போன்ற வெளி இடங்களில்  இருந்தும் 
காவை மண்ணின் மைந்தர்கள் ஊருக்கு   வருவது அதிகம்!
 
கோடை  வெயில் உக்கிரமாக இருந்தாலும் மனம் மட்டும் சில்லென்றே இருக்கும் இந்த நாட்களில்!
 
மே 15 இல் கொடி ஏற்றம்.. தினமும் இரவு பூசை, ஜெபம் ..
தினமும் வெவ்வேறு  பங்கு தந்தைகளின் பிரசங்கம்!
பக்த சபைகளின் வழிபாடுகள்! மும்பை தினம், துபாய் தினம், KOFA தினம் என்று
தினமும் இரவில் கச்சேரி, பட்டிமன்றம், ஆடல் பாடல், நாடகங்கள் என்று வித விதமான கலை நிகழ்ச்சிகள்!
 
எங்கு பார்த்தாலும் வண்ண மயமான ஒளி விளக்குகள்!(அதிலும் குறிப்பாக 9 மற்றும் 10 ஆம் திருநாளில்)
விளையாட்டு போட்டிகள்! (குறிப்பாக கிரிக்கெட்)
8 வது திருநாளில் புதுநன்மை வாங்கும் சிறுவர், சிறுமியர் 
 (குறிப்பாக அன்று காவையில் எங்கு சென்றாலும்  பிரியாணி வாசம் இருக்கும்)   
 
9 ஆம் திருநாளில் இன்னும் கூட்டம்  சற்று அதிகமாகவே இருக்கும்! பக்கத்துக்கு ஊரில்
இருந்தும் உறவுகள் பலர் வருவதை பார்க்கலாம்!
அன்று இரவு நடக்கும் சிறப்பு பூசை! பின்னர் நள்ளிரவில் வாணவேடிக்கைகள், நாதஸ்வர மேளங்களுடன் தொடங்கும்  உபகார மாதாவின்  சப்பர பவனி!
உரிமையோடும் பக்தியோடு தேரை இழுத்து  செல்லும் நமது மக்கள்!
10 ஆம் திருநாளில் பிற மதத்து மக்களும் மாதாவை தரிசிக்க வருவதை காணலாம்!
 
பெண்களின் கூட்டத்தை விட ஆண்களின் கூட்டமே அலை மோதும் கன்னங் கடைகள் !!
நினைத்தாலே இனிக்கும் "தேன்குழல் மிட்டாய்"!
 திருவிழா நாட்களில் அந்தோணியார் கோவிலில் நடைபெறும் அசனம்! குறிப்பாக செவ்வாய் கிழமைகளில்!

பல திருமணங்கள், சுபமுகுர்த்தங்கள்  நடைபெறுவதும் இந்த நாட்களில் தான்!
(மறக்க முடியுமா மட்டன் கறியும் பாயசமும்)!
 
இந்த நாட்களிலே சற்று அழகு அதிகமாக தெரியும் நமது ஊர் இளம் பெண்கள்
தெருக்களில் பேஷன் ஷோ நடத்தும் நம்ம பசங்க
 
வெளி இடங்களிலும் வெளி நாடுகளிலும் இருக்கும் நமது நண்பர்களை  இந்த நாட்களில் தான் பார்க்க முடியும்!
இந்த நாட்களில் தெருக்களில் நடந்து பார்த்தால் தெரியும் அனைத்து மக்களின் முகங்களிலும் சந்தோசமும்  கொஞ்சம் பரபரப்பும் (Busy) இருக்கும்! ஊரே மகிழ்ச்சியில் இருப்பது போல் இருக்கும்!
 
நம்மை அறியாமலே நமது மனதில் ஒரு ஆனந்தம்  இருக்கும்!
 
உலகத்தை சற்று மறந்து காவையே உலகமாக தெரியும் அழகான நாட்கள் இவை
 
மே 25  இல் ஊர் அசனம் வேறு வைக்கிறார்கள் !  (2002 இல் இருந்து)
இப்போது 49 வது ஆண்டு விழா மே 15 இல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது!  
காவையில் திருநாளை கொண்டாடி கொண்டிருப்பவர்களுக்கும், என்னை போல் விதி செய்த சதியால் திருநாளுக்கு போகமுடியாமல் இருப்பவர்களுக்கும் திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்!!!!
வாழ்க தமிழ்!!
--
anand
மேலும் மேலும் உருகி உருகி "காவையை" எண்ணி எங்கும் இதயத்தை என்ன செய்வேன்!!!

0 comments:

எப்புடி..? கலக்கிடோம்ல... ;)

Back to TOP