Sachin 200 in Kavai
Feb 24, 2010, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான நாள் . சாதனைகளின் சங்கமமாய் திகழும் சச்சின் டெண்டுல்கர் மேலும் ஒரு சாதனை படைத்த சரித்திர நாள்! இரட்டை சதம் அடித்து உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் கண்ட முதல் வீரன் என்ற பெருமையை சச்சின் பெற்ற நாள் அது.. அன்று சச்சினின் முழு ஆட்டத்தையும் கண்டு பரவசம் அடைத்த பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்..
கடைசி ஓவரில் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்து சச்சின் இரட்டை சதத்தை அடிக்க மைதானத்தை தாண்டி இந்தியாவே கரகோஷம் எழுப்பியது. அந்தக் காட்சியை டி.வி.யில் பார்த்த போதே உடல் ஒரு கணம் சிலிர்த்தது. மன்னிக்கவும், ஒரு கணமல்ல நாம் நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. எனது கண்களும் ஆனந்தத்தில் பனித்து போயின...
பொறுமை,ஆளுமை,அதிரடி,அசத்தல்,அடக்கி ஆளல்,அடங்கிப் போதல் என்று அனைத்தையும் அந்த கிரிக்கெட் சிங்கத்திடம் பார்த்தேன்..
உலகின் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் டேல் ஸ்டேய்னை அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் செய்ததாகட்டும்,
கார்த்திக்,பதான்,டோனி அதிரடியாட்டம் ஆடும் வேளையில் புன்முறுவலோடு அவர்களை ஆதிக்கம் செலுத்தவிட்டு தான் அடங்கிப் போனதிலாகட்டும்,
சின்னப் பையன் போல் பந்தை நோக்கித் துள்ளிவந்து SIXER களை படையல் போட்டதாகட்டும்,
நின்று கொண்டே நிதானமாக கவர் டிரைவ், ஸ்குயார் டிரைவ், ஒன் டிரைவ் என்று கிரிக்கெட் பாடங்கள் நடத்தியதாக இருக்கட்டும்..
சச்சின் மீண்டும் காட்டிய விஷயம் - சச்சின் - கிரிக்கெட்டின் கடவுள்.
இந்த அற்புதமான தருணத்தை கொண்டாட வேண்டும் என்று நானும் எனது நண்பர்களும் முடிவு செய்தோம். உடனே "சச்சின் 200" என எழுதப்பட்ட ஒரு கேக் ஒன்றினை வாங்கி , அதனை நமது ஊர் புனித மிக்கேல்லாயார் கெபியில் (Near GOVERNMENT SCHOOL) வைத்து திலீபன் அண்ணன், ஸ்டாலின் அண்ணன் , ரூபன் அண்ணன், சுவல்சன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினோம். அங்கு வந்த அனைவர்க்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினோம்.
வாழ்க வளமுடன்
--ராலின்சன்
2 comments:
thalaya innoru thalayalthan paratta mudium
Post a Comment