Jun 1, 2010

காவை சூப்பர் கிங்க்ஸ்

இது காவையின் சூப்பர் கிங்க்ஸ்!

இந்த வெற்றியை காவை  மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்
-அணியை வெற்றிப்பாதையில் நடத்தி சென்ற கேப்டன்  "மவுன்சன் மணித்துரை"

29-05-2010, சனிக்கிழமை அன்று, பெருமணலில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நமது காவை அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் பத்தினாதபுரத்துடன்   மோதிய காவை அணியினர்   18 ரன்கள்  வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றினர்.
2000 ஆம் ஆண்டு "பெனி பாய்" தலைமையில் அழகையில் நடந்த போட்டியில் வென்ற பிறகு  தற்போது காவை அணி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 
இதை  பற்றி "DADA" கவாஸ்கர் கூறுகையில் 
"வென்றே தீர வேண்டும் என்ற தாகமும், அணியின் கூட்டு முயற்சியும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம்"
என்றார்.)(வழக்கமா சொல்லுற டயலாக் தான் இருந்தாலும் இது தான் உண்மை
காவை மண்ணிற்கும், காவை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமை தேடி தந்த இந்த வெற்றியின் கதாநாயகர்கள் இங்கே...
காவையின் "சச்சின் டெண்டுல்கர்" நிக்சன்(எப்பவுமே இவர்தான் காவையின் No.1 )
இளம் புயல்கள் "சுதர்சன்" அண்ணன், "தாஸ்" அண்ணன், "யூத்" பெனி பாய் (Age no bar for champions )..
காவையின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கில்டன், "stylish "ஜெகன் & தங்கதுரை
அணியின் முதுகெலும்பாய்   திகழ்ந்த "மூத்த வீரர்" கவாஸ்கர்..  
நம் பெருமைமிகு கேப்டன் மவுன்சன் (சென்னைக்கு "டோனி"  காவைக்கு நம்ம "மணி"! பில்டிங்ல தான் கொஞ்சம் சொதப்பிட்டார்)

இக்கட்டான சமயங்களில் கை கொடுத்த  "HBK "அலெக்ஸ்
அணிக்கு மேலும் வலு சேர்த்த "Never Say Die "அருண், "மண்ணின் மைந்தன்" சுபாஸ்டின், & முத்து
வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக  ஆடிய  ஆண்ட்ருஸ்
தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த தினேஷ் (Mr .Consistent)
அனல் பறக்கும் வேகபந்து வீச்சு மூலம் எதிரணிகளை திணறடித்த ஸ்டாலின்...
வெற்றிக்கு அடித்தளமிட்ட காவையின் "Young dangers " கிறிஸ்டோபர் & நிசி
Last but not least .. தற்போதைய காவை அணியின் "One Man Show " அமல்..
இளமையும் அனுபவமும் கொண்ட அணி இது!
வெற்றியின் ரகசியம்  "They played as a team.."
போட்டியின் போது "commentator "  ஆக பணிபுரிந்தார் கிங்சன்!
போட்டியை நேரில் சென்று பார்த்து நமது அணியை உற்சாகப்படுத்தினர் நமது காவை நண்பர்கள் !
ஆட்டம்  பாட்டமுடன் காவை வந்த  நமது அணியினர் பின்னர் வெற்றி கோப்பையுடன் ஊர் முழுவதும்  சுற்றி  வந்தனர் !
அணியை வெற்றிப்பாதையில் நடத்தி சென்ற கேப்டன்  "மவுன்சன் மணித்துரை" இந்த வெற்றியை காவை  மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார். 

பெருமணலில் பெரும் வெற்றியை பெற்ற காவையின் சூப்பர் கிங்குகளை  வாழ்த்துகிறோம் !
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்!  உங்களால் காவை பெருமை அடைகிறது!


நம்  வெற்றியை நாளை சரித்திரம்  சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
வாழ்க தமிழ் !
  


--
peter

2 comments:

viju,  June 01, 2010  

peter kalkkal.............இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!........jaikofa........kalakkunka da i miss u all

Anand June 01, 2010  

"முத்த வீரர்" கவாஸ்கர்.. sorry sorry "மூத்த வீரர்" கவாஸ்கர்..

எப்புடி..? கலக்கிடோம்ல... ;)

Back to TOP